உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காவிட்டால் இணையத்தில் தரவிறக்கவும்!
Saturday, July 21st, 2018ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தைப் பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையத்தளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தைத் தரவிறக்கம் செய்ய முடியும். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்று ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
|
|