உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக சாதனை!
Thursday, December 28th, 2017கல்வி பொது தராதர உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக சாதனை படைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொது தராதரப் உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாரகன் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சிறிதரன் துவாரகன் பௌதிக விஞ்ஞானம் பாடத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடமும், மாவட்ட ரீதியிலும் முதலிடம் பெற்றுள்ளார்.
அதேநேரம், ஆங்கில மொழி மூலம் கணிதப்பாடப்பிரிவில் யாழ்.பத்திரியாசிரியார் கல்லூரியைச் சேர்ந்த போல் ஜான்சன் அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தினையும், மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
அத்துடன், யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி மாணவி கமலேஸ்வரி செந்தில்நாதன் உயிரியல் தொழில்நுட்ப பாடத்தில் அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தினையும், மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Related posts:
|
|