உப பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

தமிழ் உப பொலிஸ் பரிசோதகர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் உப பொலிஸ் நிலையங்களில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் இதில் இணைந்து கொள்ளலாம் எனவும் அவ்வாறு இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ்; நிலையங்களிலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைந்து கொள்பவர்களுக்கான வயதெல்லை 18 தொடக்கம் 28 வரை ஆகும். விண்ணப்பப் படிவங்களை வருகின்ற 2 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். “பணிப்பாளர் ஆட்சேர்ப்பு, பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவு, இல 375 ஸ்ரீசம்புத்தவ ஜயந்தி மாவத்தை கொழும்பு 6” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Related posts:
|
|