“உன்னை அறிந்தால் உலகில் வாழலாம்” – எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ் சின்மயா மிஷன் வழங்கும் ஞானவேள்வி!
Saturday, April 20th, 2019எதிர்வரும் 25.04.2019 ஆம் திகதி வியாழக்கிழமைமுதல் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை, 6.30 மணி முதல் 9.00 மணிவரை நல்லூர் ஆலய மேற்கு வீதியில் அமைந்துள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன மண்டபத்தில் யாழ்.சின்மயா மிஷனால் ஞானவேள்வி நடத்தப்படவுள்ளது.
இந் நிகழ்வில் இலங்கை சின்மயா மிஷனின் கொழும்புக்கிளை சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி அவர்களால் பகவான் ஆதிசங்கரரால் அருளிச்செய்யப்பட்ட பஜகோவிந்தம் எனும் நூலை அடிப்படையாகக்கொண்டு உன்னை அறிந்தால் உலகில் வாழலாம் எனும் தலைப்பில் ஞானவேள்வி நடாத்த உள்ளார்.
அத்துடன் 25.04.2019 ஆம் திகதிமுதல் 28.04.2019 திகதி வரை காலை 6.30 மணி முதல் 7.30மணி வரை இல 9 செட்டித்தெரு ஒழுங்கையில் அமைந்துள்ள யாழ் சின்மயா மிஷன் ஆச்சிரமத்தில் அம்ருதபிந்து உபநிஷத் விளக்கவுரை வகுப்பு நடைபெறவுள்ளது இவ் இரு நிகழ்வுகளிலும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்
Related posts:
|
|