உந்துருளியில் வந்த இருவரால் பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு – தென்மராட்சியில் சம்பவம்!

Wednesday, June 8th, 2022

பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணின் சங்கிலி திருடர்களால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது .

குறித்த சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டச்சு வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

தனது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு உந்துருளியில் வேம்பிராய் பகுதியினூடாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே சங்கிலி அறுக்கப்படுள்ளது.

34 வயதான குறித்த பெண் 2 பவுண் தங்க சங்கிலி அணித்திருந்துள்ளார். வேம்பிராய் பகுதியில் இவரை பின்தொடர்ந்து உந்துருளியில் வந்த இருவர் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தென்மராட்சிப் பகுதியில் அண்மைக்காலமாக வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: