உந்துருளியில் பயணிக்கும் முன்னர் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானியுங்கள் – அல்லது பாவனையை கைவிடுங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவுரை!
Friday, June 30th, 2023உந்துருளி பயணிக்கும் முன்னர் மிகவும் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது உந்துருளி பாவனையை கைவிட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டள்ளதாவது –
நேற்று யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற நேர் எதிராக பயனித்த உந்துருளிகள் இரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவில் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடுமையான முயற்சி எடுத்தனர். ஆனால் சிகிந்நை பலனளிக்கவில்லை.
இருவரது குடும்பங்கள், உறவினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மற்றும் நண்பர்களின் அழுகையும் துயரமும் வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவுப் பகுதியில் சில மணி நேரம் அவல உணர்வை ஏற்படுத்தியது.
குறிப்பாக வடபகுதியில் உந்துருளி பயணம் மிகவும் அபாயகரமான செயல். அதிகரித்த வேகம், கவனக்குறைவு, என பல தவிர்க்கபட வேண்டிய விடயங்களில் அக்கறை கொள்வதில்லை.
அந்தவகையில் உந்துருளி பயணிக்கும் முன்னர் மிகவும் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது உந்துருளி பாவனையை கைவிட வேண்டும் என அவர் சமூக அக்கறையுடன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|