உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று – மாலை உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவிப்பு!

Thursday, June 6th, 2024

நாடாளுமன்றில் இன்று,  மின்சாரக் கட்டணம் மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை இன்று மாலை 05.30 மணியளவில் உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க கணக்குகளுக்கான குழு, கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் சுகாதாரம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு என்பனவும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது

இதேநேரம் புதிய மின்சார சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்று, குறித்த சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ள புதிய மின்சார சட்டமூலமானது முழுவதுமாக அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் பல சரத்துகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் ஒரு சரத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் உத்தேச புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக நேற்று பத்தரமுல்லை ௲ பொல்துவ சந்தியில் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார ஊழியர் சங்கம் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இலங்கையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவாது - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீ...
20,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகம் - நாளைமுதல் நாடுமுழுவதும் விநியோகிக்கவும...
நாட்டின் அனைத்து விளையாட்டு துறைகளையும் மேம்படுத்த தேசிய விளையாட்டு நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் ...