உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்நதியா சென்றடைந்தார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச !

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் பசில்ராஜபக்ச இந்தியா சென்றடைந்துள்ளார்.
இந்திய விஜயத்தின் போது நிதியமைச்சர் இந்திய பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்
அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால் இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவிடமிருந்து கடன்கோருவதே நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் நோக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நிதியமைச்சரை சந்திப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகளவு முதலீட்டை ஊக்குவிப்பதே நிதியமைச்சரின் விஜயத்தின் நோக்கம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தாலும் அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சினையால் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக கடனை கோருவதே அவரது விஜயத்தின் நோக்கம் என சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|