உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் 5 ஆம் திகதிவரை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் – தபால்மா அதிபர் அறிவிப்பு!

Sunday, August 2nd, 2020

இதுவரையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்குரிய தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஓகஸ்ட் 4ஆம் திகதி மற்றும் வாக்களிப்பு நாளான ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆகிய இரு தினங்களிலும் தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களைப் பெறமுடியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரையில் 99 சதவீதமான வாக்குச் சீட்டுகள் உரியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்  தபால்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: