உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை பெறுவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனக்குரிய உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை பெறுவதில்லையென முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையையோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்தையோ வசிப்பிடமாக பெறமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையை இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
மிரிஹானால் உள்ள தனது தனியார் இல்லத்தில் தொடர்ந்து வசித்து வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள மகாகமசேகர மவத்தையில் உத்தியோகபூர்வ இல்லத்தை பதவிக்காலத்தில் பயன்படுத்தினார். ஓய்வு பெற்ற பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு மைத்ரிபால சிறிசேன ஒரு அமைச்சரவை பத்திரம் மூலம் அங்கீகாரம் பெற்றிருந்தார். அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை பெற மாட்டேன் என சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|