உத்தரதேவியின் பரீட்சார்த்த பயணம் வெற்றி : நாளை சேவைகள் ஆரம்பம்!

Friday, December 21st, 2018

இந்திய அரசால் அண்மையில் வழங்கப்பட்ட புதிய தொடருந்தின் பரீட்சார்த்த பயணம் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணம் வெற்றி பெற்றுள்ளது என்றும் இன்றும் ஒரு சில தினங்களில் உத்தரதேவி சேவைக்கு விடப்படும் என்றும் தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது எப்போது சேவையில் ஈடுபடும் என்ற நேர அட்டவணை தொடருந்து திணைக்களத்தால் இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை. அவை கிடைத்தால்தான் ஆசனப் பதிவுகள் நேரங்கள் என்பவற்றைப் பயணிகளுக்குத் தெரியப்படுத்த முடியும். காலை 6.10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சேவையை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

48383854_2249928775282362_191590309161861120_n

Related posts: