உதைபந்தாட்டக் கம்பம் வீழ்ந்து மாணவன் பலி!
Wednesday, August 8th, 2018உதயநகர்ப் பகுதி மைதானத்திலுள்ள உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனது தலையில் உதைபந்தாட்டக் கம்பம் சரிந்து விழுந்ததால் படுகாயமடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த மரணம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை – யாழில் சம்பவம்!
இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை வடபகுதி மக்கள் நம்பவில்லை - சரத் பொன்சேகா சுட்டி...
கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது தொடர்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அமைச்சர் பந்...
|
|