உதவித்திட்டங்களை அவதானமாக கையாள வேண்டும் – இலங்கைக்கு சர்வதேச நாணயசபை அறிவுறுத்து!

Saturday, June 30th, 2018

சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கை அவதானமாக கையாளவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் பயனைப்பெறுவதற்கு இலங்கை சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கவனமாக கையாள்வது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பாரிய பிராந்திய வர்த்தகம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு மூலம் இலங்கைக்கு நன்மையை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பாரிய கடன் மற்றும் சமூக தேவைகளை கருத்தில் கொள்ளும் போது இலங்கை இந்தத் திட்டங்களை நிதானமாக கையாள வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: