உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டு – வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Friday, December 17th, 2021


பெண்களை மையப்படுத்தி வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர அன்றாட தேவைகளை நிவர்த்திப்படுத்துவதாக இருக்காக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பின திருமதி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – பெண்களுக்கு குறிப்பாக பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு நிலையான பொருளாதார கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்
குறிப்பாக அரசாங்கத்தாலோ அன்றி அரச சார்பற்ற நிறுவனங்களாலோ வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால் அவை அவ்வாறான ஒரு பொறிமுயையூடாக வழங்கப்படாமையாலேயே கொடுக்கப்படும் வாழ்வாதார உதவிகள் பெறுமதியற்றதாக அல்லது பயனற்றதாக அமைகின்றது.
அத்துடன் குறித்த உதவியை வழங்கும் போது தொழில் முயற்சியை அவர்கள் முன்னெடுப்பதற்கான பயிற்சிகளும் முறையாக வழங்கப்பட்டு அத்துறையை தொடர்ச்சியாக கண்காணித்து அதனை மேலும் வலுவூட்டவும் நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
போர் கொடுத்த வலியுடன் வேறுபல துன்ப துயரங்களுடனும் இன்று பல பெண்கள் நாளாந்தம் கண்ணீர் சிந்தியவாறு தமக்கான எதிர்காலத்தை தேடியபடி நிலையான ஒரு வாழ்வுக்காக ஏங்கி நிற்கின்றார்கள்.
இதைவிட சமூகத்தில் தற்போது புரையோடியுள்ள போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை அதிகரிப்புகளால் அதை அதிகளவில் பாவிக்கும் ஆண்களைவிட பெண்களே பல வழிகளிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சட்டத்தினூடாக கணவர் ஒரு குற்றத்துக்கான தண்டனை பெறும் நிலைக்கு சென்றால் அந்த குழும்பத்தின் நாளாந்த உணவுக்கான உத்தரவாதமே இல்லாது போகின்றது. இதனாலும் பெண்களே பாதிக்கின்ற நிலையும் உருவாகின்றது.
அதேபோன்று மது பாவனையை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது. இந்த சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி சட்டரீதியாக கொள்வனவு செய்து சட்டவிரோதமாக விற்கப்படும் நிலையும் அதிகரித்துள்ளது.
இதை துறைசார் தரப்பினர் கண்டுகொள்ளதாதிருப்பதும் அதனால் மதுப்பாவனை தடையின்றி அதிகரிப்பதும் குடும்பங்களில் குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணமாகின்றது. குறிப்பாக பெண்களுக்கெதிரான மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிக்க இது ஏதுநிலைகளையும் அதிகளவில் உருவாக்குகின்றது.
இவற்றை கட்டப்படுத்த ஒரு முறையான கட்டமைப்பை சமூக அக்கறையுடன் கொண்டுவராது போதைப்பொருளை கட்டுப்படுத்துவோம், மதுபாவனையை ஒழுிப்போம் என்று கூறுவதில் பலன் கிடைக்கப்போவதில்லை.
அதேபோன்று காலாகாலமாக நாம் எமக்கான உரிமைகளை கேட்டு போராடி வருகின்றோமே தவிர அதனை உறுதி செய்யும் வகையிலான பொறிமுறைகளை உருவாக்கிக்கொள்வதில் தவறுகளையே விட்டுவருகின்றோம்.
அந்தவகையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை மட்டுமல்லாது அவர்கள் எதிர்கொள்ளும் அத்தனை சவால்களையும் வெற்றிகொள்ள சட்டத்தின் பங்களிப்பும் சமூகத்தின் மனச்சாட்சியுடன் கூடிய முழுமையான அதரவும் மட்டுமல்லாது ஒவ்வொரு பெண்களுக்கும் தம்மீதான தன்நம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சந்தர்ப்பங்களை தவறவிடும் போக்கிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறாதிருப்பது கவலைக்குரியது – தோழர் ஜீ...
ஓகஸ்ட் 6ஆம் திகதி கட்சிகளின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளிவரும் - தேர்தல் செயல...
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்த...