உதவிகளை எதிர்பார்த்து யாழ்.மாவட்டத்ததில்14,000 குடும்பங்கள் உள்ளன – யாழ்.மாவட்ட அரச அதிபர்!

யாழ்.மாவட்டத்தில் 14,000 குடும்பங்கள் மிகவும் வறுமையாக முன்னேற வழியற்ற நிலையில் வாழ்வதுடன் இவர்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் முதல் வேலைவாய்ப்புகள்வரையான பலதரப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உலக வங்கியின் மூலோபாய சமூக மதிப்பீட்டு கலந்துரையாடல் கருத்தரங்கு நேற்று மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த எண்ணிக்கையை விடவும் அதிகமாகவே வறுமைப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். அவர்களின் நிலமை மிக மோசமானது. யாழ்.குடாநாட்டின் மீள்குடியமர்வு முழுமை பெறவில்லை. கடந்த காலத்தில் 4,000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. இன்னமும் 3,072பேர் முகாம்களில் உள்ளனர். 7ஆயிரம் குடும்பம் மீள்குடியமரத் தயாராகவுள்ளனர். அவர்கள் உள்ளிட்ட குடாநாட்டு மக்களுக்கு வீடு மற்றும் சுகாதார வசதிகளின் தேவை அதிகமாகவுள்ளது. கல்வி போக்குவரத்து தேவைப்பாடுகளும் முழுமையாக செய்யப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றன. கல்விக்காக வேறு இடம் செல்லும் நிலையும் உண்டு. மீனவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படாதுள்ளன.
முக்கியமாக இந்திய மீனவரால் ஏற்படும் பிரச்சினை. கமத் தொழிலைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான சந்தைப்படுத்தும், விலை நிர்ணயப் பிரச்சினை காணப்படுகின்றது. வறட்சியும் அவர்களை பாதிக்கின்றது. சிறுவர்கள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பில் சுமார் 6ஆயிரம் பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் அவர்களுக்கான ஆற்றுப்படுத்தலுடன் கூடிய வாழ்வாதாரம் வேண்டும். வேலைவாய்ப்பைப் பொறுத்த வரையில் யாழ்.குடாநாட்டில் குறைந்தபட்சம் 20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தினாலே இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினையை ஓரளவு நிறைவுபேறும். இவையே இப்போது யாழ். குடாநாட்டில் உள்ள நிலை என்றார்.
Related posts:
|
|