உதயங்கவை கைது செய்ய நடவடிக்கை!

உக்ரேன் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தன்னிடமுள்ள ராஜதந்திர கடவுச்சீட்டை மீள வழங்குவதாக அவர் மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ள போதும் இதுவரை அதனை கையளிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் தன்னிடமுள்ள சாதாரண கடவுச்சீட்டை பயன்படுத்தியே அவர் ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க குறித்து டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவரின் சர்வதேச ராஜதந்திர கடவுச் சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது. அவ்வாறு செய்வதனால் திருட்டுத்தனமாகவே செல்ல வேண்டும்.
உதயங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸுக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸ் அவரை தேடி வருகின்றது. அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை. அவர் இல்லாத நிலையிலும் அவருக்கு எதிரான வழக்கு இங்கு விசாரணை செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|