உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுவிட்டனர் – வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தெரிவிப்பு!

உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுள்ளனர் என்று வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது தென்னிலங்கை மக்களும் பல்வேறு இடர்பாடுகளையும் ஏமாற்றங்களையும் கண்டுவிட்னர்.
அதுமட்டுமல்லாது அந்த ஆட்சியாளர்களதும் அவர்களுக்கு துணை நின்று தாங்கிப் பிடித்தவர்களும் தத்தமது சுயநலன்களுக்காக எத்தகைய துரோகங்களை செய்துள்ளார்கள் எண்பதையும் எமது மக்கள் தற்டபோது இனங்கண்டுள்ளனர்.
அந்தவகையில் இனிவரும் காலங்களில் அதை ஈடுசெய்துகொள்ள தமிழ் மக்கள் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|