உண்மை  நீதி ஆணைக்குழு ஜனவரியில் அமைக்கப்படும் –  பிரதமர் ரணில் உறுதி!

Thursday, October 25th, 2018

உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியிருந்தார்.

அதனை அடுத்து விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு சுமார் பத்தாண்டுகள் கழிந்தபோதும் வழமை நிலை திரும்பவில்லையே என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்கியதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் காணாமற் போனோருக்கான ஆணைக்குழுவை நியமித்துள்ளது.

உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்படும்.

இராணுவத்தின் பலம் குறைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் இப்போது மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுகின்றனர். நல்லிணக்க மற்றும் புனர்வாழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் சில சிறிய குழுக்கள் செயற்படுகின்றன. எனினும் இராணுவத்தினருடன் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் பெரும்பாலான காணிகள், தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்குப் பின்னர் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்யவுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts: