உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றது இலங்கை மத்திய வங்கி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றச்சாட்டு!

Monday, February 19th, 2024

இலங்கை மத்திய வங்கியினால் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றம் சுமத்தியுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கையொன்றை வெளியிட்டே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்தியவங்கியின் இவ்வாறான விடயங்கள் கவலையளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களுக்கு தீர்வுகாணும் வகையில், மத்திய வங்கியினால் விடுக்கப்படும் செய்திகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: