உணவு நஞ்சானது – ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, April 20th, 2022

கொக்கலை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவு நஞ்சானமை காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று(20) காலை அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா குறிப்பிட்டார்

வாந்தி, தலைச்சுற்று, வயிற்றுவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் குறித்த நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: