உணவு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதி!

Friday, December 24th, 2021

நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சிலர் முன்வைக்கும் கூற்றை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படுவது உறுதியாகும் என விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரான பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு தெரிந்த விஞ்ஞானம் மற்றும் தங்களது கணிப்பின்படி, உணவு பற்றாக்குறை ஒன்று ஏற்படும் என்றும், தற்போதைய நிலைமையில் அது உறுதியானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அப்படியான நிலைமை ஏற்படும்வரை பார்த்துக்கொண்டிருக்காமல், தற்போதே சிற்சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: