உணவு சுவாசக்குழாயில் சிக்கி குடும்பஸ்தர் பலி!

Sunday, August 21st, 2016

உணவு சுவாசக்குழாயில் சிக்கியதால் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த வியாழக்கிழமை (18)  உயிரிழந்துள்ளார்.

கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த ஜயக்கோன் உதயகுமார் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

18ஆம் திகதி மதிய உணவு உண்டபின், குறித்த நபர் நித்திரைக்குச் சென்றுள்ளார். மாலை ஆறு மணி ஆகியும் கணவர் நித்திரையிலிருந்து எழும்பாததன் காரணத்தினால், மனைவி அவரை தட்டியெழுப்பியுள்ளார். எழும்பாதிருந்த கணவனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போது,  அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனையின் போது, உயிரிழந்த நபரின் சுவாசக்குழாயில் உணவுப்பதார்த்தம் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

Related posts: