உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதி!

Sunday, March 11th, 2018

உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டவர்களே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில் அந்தோனியார் ஆலய நிர்வாகத்தினால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

ஆந்த உணவினை உட்கொண்டவர்கள் மயக்கடைந்து விழந்துள்ளனர். இவ்வாறு 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சும்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts: