உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!
Tuesday, January 22nd, 2019உணவு உற்பத்தியை அதிகரிக்கும் விவசாயத் திட்டங்களை அனுப்புமாறு மாவட்டச் செயலக விவசாயப் பிரிவிடம் அரச தலைவர் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயிகள் எவற்றை எதிர்பார்க்கின்றனர் என்பதை விவசாயிகள் ஊடாக பிரதேச செயலக ரீதியில் துறைசார்ந்த அதிகாரிகள் அறிந்து அவற்றை ஒரு முன்மொழிவாக மாவட்டச் செயலக விவசாயப் பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை கடந்த வருடம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 10.5 மில்லியன் ஒதுக்கீட்டில் உணவு உற்பத்தி அதிகரிக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காலபோக நெற்செய்கை நிறைவடைந்தவுடன் அந்த நிலத்தில் உளுந்து, பயறு விதைப்பதற்கான விதைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.
இந்த வருடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் ஊடாக விவசாயிகளிடம் இருந்து உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயற்றிட்டங்கள் பெறப்படவேண்டும். அந்த இடங்கள் மாவட்டச் செயலக விவசாயப் பிரிவின் ஊடாக அரச தலைவர் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|