உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன – உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றினூடாக உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களூடாக நிவாரண விலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts:


ஜல்லிக்கட்டு தடை விவகாரம்: தமிழ் நாட்டுக்கு மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!
சில அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெள...
வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்...