உணவுப் பாசல் விலை 10 ரூபாவால் குறைகிறது!

நாட்டிலேற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அனைத்து உணவகங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
ஒரு கிலோகிராம் பருப்பின் மீதான விசேட வர்த்தக வரி 5 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் கடலை மீதான வரி 5 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் உழுந்தின் மீதான வரி 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா மீதான தீர்வை வரி சலுகை 6 ரூபாவில் இருந்து 9 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற சீனி மீதான வரியும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி!
இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு - முதலீட்டு சபையின் உத்தரவு!
மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்கிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|