உணவுச் சட்டத்தில் திருத்தங்கள்!

Tuesday, December 4th, 2018

உணவுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய திருத்தித்திற்கு அமைய பால் மா ஊக்குவிப்வை தடுப்பதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்கதெரிவித்துள்ளார்.

இது தொடர்பான திருத்தம் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

புதிய சட்டத்திற்கு அமைய பால் மா ஊக்குவிப்பு விளம்பரங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் முன்கூட்டிய அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியமாகும். இந்த விளம்பரங்களை வெளியிடும் இலத்திரனியல் அச்சு ஊடக நிறுவனங்களும் சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

தடை செய்யப்பட்ட டீன் மீன்கள் அடங்கிய 86 கொள்கலன்கள் சந்தைக்கு விடப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது. ஏனைய கொள்கலன்கன் சந்தைக்கு சென்றடைவதை தடுக்க தேவையானநடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளன. இலங்கை கட்டளை நிறுவகத்தின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ள என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


யாழ்.நகரில் 44 குளங்கள் மாநகரசபையால் புனரமைக்கப்படும் - யாழ்.மாநகர ஆணையாளர்!
சாவகச்சேரியில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் படுகாயம்!
70 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு!
845 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ளனர்!
வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!