உடுவில் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈ.பி.டி.பியால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

Friday, November 23rd, 2018

உடுவில் பிரதேசத்திற்குட்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2018 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

உடுவில் பிரதேசத்திற்குட்பட்ட ஶ்ரீ காளியம்பாள் விளையாட்டுக் கழகம், உதய சூரியன் முன்பள்ளி, பறக்கும் கழுகுகள் விளையாட்டுக் கழகம், ஐரோப்பிய ஒன்றிய கல்வி நிலையம் ஆகியன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாகச் செயலாளரும் உடுவில் பிரதேசசபை உறுப்பினருமாகிய வலன்ரயன்(சந்திரன்) அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த உதவித் திட்டங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாகச் செயலாளரும் உடுவில் பிரதேசசபை உறுப்பினருமாகிய வலன்ரயனால் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வலிகாமம் தெற்கு பிரதேச செயலர் ஜெயகாந்தன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இரட்ணேஸ்வரி, கலாச்சார உத்தியோகத்தர் சந்திரன் மற்றும் கட்சியின் வலி தெற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

25

viber image

112

33

viber image233

Related posts: