உடுவில் பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

உடுவில் பகுதியைச் சேர்ந்த வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உடுவில் கால்நடை திணைக்களத்தில் குறித்த உதவி வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(18) நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட வறிய பயனாளிகளுக்கான ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட சுயதொழிலுக்கான வழங்களை அதிதியாக கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி.தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் சந்திரன் வலன்ரயன் வழங்கிவைத்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா அவர்களது நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ் உதவிகள் குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருதொகுதி வறிய மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் கட்சியின் வலி.தென்மேற்கு பிதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|