உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம்?

Tuesday, February 20th, 2018

உடல் தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க முன்வறுமாறு சுகாதார அமைச்சர் தனியார் மருத்துவமனைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயவர்தனபுரவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்க்காலத்தில் இதனை சிறப்புக் கட்டளையின் மூலம் இதனை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தாம் சுகாதார அமைச்சுப் பொறுப்பை ஏற்கின்றபோது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை வீழ்ச்சியடைந்திருந்ததாக தெரிவித்த அவர், தாம் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts: