உடற்பயிற்சி நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – சுன்னாகத்தில் சம்பவம்!

Tuesday, December 11th, 2018

சுன்னாகத்தில் உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த 10 பேர்கள் கொண்ட கும்பல், அடாவடி செய்து பெற்றோல் குண்டுகளை வீசி தீ வைத்து சென்றுள்ளதாக சுன்னாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் முகத்தினை துணியால் கட்டியபடி புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை ஆவா குழுவினரே முன்னெடுத்தனர் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: