உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி நிறுத்தம் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் விளக்கம்!
Tuesday, November 28th, 2017யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்திடம் உடற்கல்வி டிப்ளோமாவை பட்டப்படிப்பாக மாற்றுங்கள் அல்லது நிறுத்தி விடுங்கள் எனக் கூறியதற்கு அமைய உயர்ந்த பதவியில் உள்ள சமூக சிந்தனையுள்ளவரால் எடுக்கப்பட்ட முடிவே கற்கைநெறி நிறுத்தப்பட்டமையாகும்.
உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுத்தப்பட்டமைக்கான காரணம் பற்றி உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமார் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆண்டு வரை சிறப்பாக இயங்கி 225 உடற்கல்வி ஆசிரியர்களையும் 15 க்கு மேற்பட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களையும் உருவாக்கி வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு உதவியது.
இந்தக் கற்கைநெறி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இலங்கையில் இந்தக் கற்கைநெறியே உயர்ந்ததாக காணப்பட்டது. ஆனால் இன்று சப்ரகமுக, சிறிஜெயவர்த்தனபுர, களனி ஆகிய கற்கைநெறி பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலே பட்டப்படிப்புக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்னும் புதிய சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை. இரண்டு வருட உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் பல்கலைக்கழக அணியில் விளையாட முடியாமை. 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாண சபையால் பட்டப்படிப்புக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க முடியும்,
டிப்ளோமாதாரிகள் கொழும்பு அமைச்சை நாடவேண்டிய சூழ்நிலை, ஜீ.சி.ஈ. உயர்தரத்தில் கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு பட்டப்படிப்பு அவசியம். இரண்டு வருட உடற்கல்வி டிப்ளோமா என்.வி.கியூ 6க்குள் உள்வாங்கப்பட்டாலும் என்.வி.கியு 7 ஐ எவ்வாறு அடைவது? ஊடற்கல்வி டிப்ளோமா கற்கையால் ஆசிரிய நியமனத்தை மட்டுமே பெறமுடியும் அதுவும் ஆசிரியர் வெற்றிடம் இருக்கும் வரை என்ற கவலைகள் முன்வைக்கப்பட்டன. பட்டப்படிப்பாக இதனை உருவாக்கினால் எந்த வேலையையும் பெற்றுக்கொள்ளலாம். என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இவற்றை மறுத்து கற்கை நெறி நிறுத்தப்பட்டது.
Related posts:
|
|