உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

Monday, June 6th, 2016

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கொஸ்கம சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முப்படையினரையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென நேற்றைய தினமே ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: