உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Friday, April 15th, 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இன்று மதியம் ஒரு மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில், உந்துருளிகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 5,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும், பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எரிபொருளை ஏற்றகக்கொண்டு மேலும் இரு கப்பல்கள் இன்று இலங்கை வந்து சேரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்திய கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனும் 37 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனும் குறித்த இரண்டு கப்பல்கள் இன்று இலங்கை வந்து சேர உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

00

Related posts: