உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை -ஜேன் கிளாட் ஜங்கர்

Saturday, June 3rd, 2017

காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் சீனாவுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியமும் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

பிரசஸ்ஸில் இடம்பெற்ற சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே ஜேன் கிளாட் ஜங்கர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, சுத்தமான எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் சர்வதேச தீர்வு அவசியம் என்பதை சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இதற்காக தாம் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பரிஸ் காலநிலை மாற்றம் குறித்த உடன்படிக்கையை முழுமையான செயற்படுத்தி உலகளாவிய தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் செயற்பாட்டை முன்னெடுப்பதை விட முக்கியமானது எதுவும் இல்லை. எனவே பரிஸ் ஒப்பந்தத்தில் பின்வாங்கல் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: