உச்ச மட்டத்தில் கொரோனாவின் தாக்கம் – சுகாதார பணிப்பாளர்!

Wednesday, April 15th, 2020

கொரோனா வைரஸ் தொடர்பில் நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உச்சகட்டத்தில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவி்ட்டால் நிலைமை பாரதூரமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்

Related posts: