உச்ச நீதிமன்றின் தீர்ப்பு: மகிந்த தேசப்பிரிய குழப்பத்தில்!

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
இதை அடுத்து பொதுத் தேர்தலுக்கான செயற்பாடுகளையும், உடனடியாக இடைநிறுத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்சநீதிமன்றம், இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது,
இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, தாம் தேர்தல் செயற்பாடுகள் அனைத்தையும் நேற்று மாலையுடன் நிறுத்தி வைத்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயற்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு, உதவித் தேர்தல் ஆணையாளர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டுவிழா செப்டம்பர் 3இல் – ஜனாதிபதி
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று இம்முறையும் கம்பீரமாக நடைபெறும் - பாதுக...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு...
|
|