உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் வந்தால் எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் – இரட்டை குடியுரிமை தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!
Sunday, October 23rd, 2022நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, தற்போதைய நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுமார் பத்து எம்.பி.க்கள் உள்ளனர்.
ஒரு சிலரைத் தவிர, அந்த எம்.பி.க்கள் யார் என்பது தனக்குத் தெரியாது என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.
சிறிய திருத்தங்களுடன் இந்த திருத்தத்தை அங்கீகரித்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டின் ஜனநாயகத்திற்கு இது ஒரு முக்கியமான தருணமாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்வோம...
நீர் கட்டணப் பட்டியல் அச்சிடுவது நிறுத்தம் – நடைமுறைக்கு வருகிறது இ-பில் அல்லது குறுஞ்செய்தி - நீர் ...
நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டது எரிபொருள்களின் விலை !
|
|