“உங்களுக்கொரு வீடு உங்கள் நகரத்தில்” யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் பங்கேற்பு!

Thursday, November 19th, 2020

நாவற்குழி பகுதியில் மத்தியதர குடும்பங்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் நேற்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) கலந்து கொண்டார்.

 “சியபத்த வீடமைப்பு” எனும் கருப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக இது அமையவுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்நிட்டு குறித்த வீட்டுத்திட்டம் நாடு முழுவதும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக ஈபிடிபி யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், தென்மராட்சி பிரதேசச் செயலர் உஷா சுபலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபையின் நாவற்குழி வட்டார உறுப்பினர் திருமதி லூர்து மேரி, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் பிரதிநிதி வின்சேந்திரராஜன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெயர்ப்பலகையை அரசாங்க அதிபர் திரை நீக்கம் செய்து வைத்திருந்தமை குறிப்பீடத்தக்கது.

Related posts: