உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை கொண்டு முறியடித்தது ரஷ்யா!

Saturday, February 26th, 2022

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: