உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை ரஸ்ய படைகள் நடத்தவில்லை – புடின் தகவல்!

உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை எங்கள் படைகள் நடத்தவில்லை என புடின் தெரிவித்துள்ளார்.
10 ஆவது நாளாக உக்ரைனை ரஷ்யா தாக்கி வருகிறது . ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. மோதல்களில் பலர் இறந்தனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக சமூகம் கண்டனம் தெரிவித்தது.
உக்ரைனின் தலைநகரான கியேவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதைத் தடுக்க உக்ரைன் பாதுகாப்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், ரஷ்யப் படைகள் தொடர்ந்து தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்தன. உக்ரைனில் உள்ள நகரங்களில் தனது படைகள் குண்டுகளை வீசவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜெர்மன் அதிபரிடம், ரஷ்யப் படைகள் உக்ரைன் நகரங்களில் குண்டுகளை வீசவில்லை என்றும், குடியிருப்பு, பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் கூறினார்.
முன்னதாக, உக்ரைன் பாதுகாப்புப் படையினரிடம், அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும், தொடர்ந்து தாக்குதல்களை நடத்தப் போவதாகவும் புடின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|