ஈ- ஹெல்த் அட்டை வழங்க நடவடிக்கை!

Monday, January 14th, 2019

ஈ – ஹெல்த் அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த அட்டை 6 மாதங்களுக்குள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திலுள்ள நிறுவனம் ஒன்றே இலங்கையில் இந்த அட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் இதன் மூலம் யாராவது ஒரு நோயாளியின் நோய் தொடர்பான முழுமையான அறிக்கை இந்த அட்டையில் உள்ளடக்கப்படும் என்பதால், குறித்த நபர் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலுமுள்ள வைத்தியரிடம் விரைவாக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் 71ஆவது மாநாட்டையொட்டி, ஜனாதிபதி தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஈ-ஹெல்த் அட்டை இலங்கையில் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: