ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது கொலைவெறித் தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!

Tuesday, January 2nd, 2018

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சந்தர்ப்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –

இன்று மாலை தமது குறித்த வேட்பாளரின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாத நபர்கள் வேட்பாளர் எங்கே என அவரது தாயாரிடம் வினவியதோடு, அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தமது எச்சரிக்கையை கேட்கத் தவறினால் விளைவு வேறுவிதமாக இருக்குமென கூறியதுடன், தாங்கள் வைத்திருந்த தலைக் கவசத்தால் வேட்பாளரின் தாயாரை தாக்கியும் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் எமக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்துக்கொள்ளாத விசமிகள் இப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர் என கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர சபைக்கு போட்டியிடும் உதயசிறி என்ற  வேட்பாளரை அவரது சகா ஒருவரே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரது பெயரை கூறு தொலைபேசியில் மிரட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தமையும் அது பின்னர் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

Related posts:


ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை - பாதீட்டினூடாக தீர்வு காண நடவ...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 665 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தக...
யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க அன்றுமுதல் நடவடிக்கை!