ஈ.பி.டி.பி. எடுத்த வட்டுக்கோட்டை தீர்மானம்!

Sunday, March 26th, 2017

இலங்கை ஓர் பல்லின பல்தேசிய இனங்களைக் கொண்ட மதச் சார்பற்ற நாடாக இருத்தல் வேண்டும். இதில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒரு தேசிய இனம். எமக்கென்று வரலாற்று ரீதியான ஓர் பூர்வீக நிலம் உண்டு. தனித்துவமான கலை சலாசார பண்பாடுகள் உண்டு. இவைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு இன்றையதினம் (26) வட்டுக்கோட்டைத் தொகுதியில் நடந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார ரீதியான உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது உறுதிபூணப்பட்டது.

மேலும் இந்நிகழ்வின் போது வடக்கு கிழக்கு இணைந்த ஒரு நிர்வாக அலகே எமது வரலாற்று வாழ்விடம்; என்றும் அதற்கு விஷேட அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பததோடு முஸ்லிம் மக்களுக்கு நிலத் தொடர்பற்ற பிரதேசங்களை உள்ளடக்கிய அகச் சுயாதிக்க அலகு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் நடந்த கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட இப் பிரகடனங்களை வெற்றிகொள்வதற்காக நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை ஒன்றிணைத்து மக்கள் சக்தியின் பலத்தோடு புதிய உத்வேகத்துடன் உழைப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சி வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்துள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமாரது ஒருங்கிணைப்பில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், ஆகியோர்கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் கடந்தகால,நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பான விளக்கங்களை சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தி உரையாற்றியிருந்தார்.

Related posts: