ஈ.பி.டி.பியை பலப்படுத்தினால் அது மக்களுக்கு பயன்களாகவே மாறும் – திருமலையில் தோழர் ஸ்டாலின் உரை!

அவதூறுகளையும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும் சுமந்து கொண்டும் புலிக்கும் சிங்கத்திற்குமிடையே சிக்கித்தவித்த தமிழ் மக்களுக்கு உவதவுவதற்கும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் எமது உயிரை பணயம் வைத்து பாடுபட்டிருக்கின்றோம் அதேபோல் எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அங்கீகாரங்களை உட்சபட்சமாகப் பிரயோகித்து எமது மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக்காணும் அதேநேரம் அடிப்படைப் பிரச்சனையான அரசியல் உரிமைக்கு ஒரு கெளரவமானதும் சமத்துவமானதுமான தீர்வு காணப்படவும் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆற்றல் மிகுந்த வழிகாட்டலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயற்பட்டு வருகின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலக வளாகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று 08.07.2018 அன்று நடைபெற்ற விஷேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரங்களில் இருந்தவர்களுடன் நாம் கொண்டிருந்த இணக்க அரசியலினூடாக வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார் விடயங்கள் ஏராளம்.
ஆனாலும் இன்று இம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இதர தமிழ் அரசியல் தரப்பினரால் அதிகமாக இப்பகுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை நாம் கண்ணூடாக காணமுடிகின்றது.
கடந்த காலங்களில் நாம் இம்மாவட்டத்தில் பல குடியேற்றக் கிராமங்களை ஏற்படுத்தியதையும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
மக்களுக்காக பல தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். அந்தவகையில் நிகழ்காலத்திலும் எமது கட்சியினூடாக முன்னெடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறுபட்ட நலத்திட்டங்கள் உள்ளடங்கலான பணிகளை இம்மாவட்டத்தில் கூடுதலாக முன்னெடுப்பதற்கு எமது கட்சி அதிக அவதானம் செலுத்தியுள்ளது.
அதனடிப்படையில் தற்போது எம்மிடம் அத்தகைய அரசியல் பலம் காணப்படாத போதிலும் குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தென்னிலங்கை அரசியல் தலைமைகளோடு உள்ள நல்லுறவுகளைக் கொண்டும் நிகழ் காலத்திலும் மக்களுக்கான சேவைகளை கட்சியினூடாக முன்னெடுத்து வருகின்றோம்.
அந்தவகையில் இம்மாவட்ட மக்களின் தவைகளையும். கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு நாம் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
உப்புவெளி பிரதேச சபையில் எமது கட்சிக்கு ஒரு உறுப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளது. இதனூடாக மக்கள் பணிகளை நாம் முன்னெடுத்து இப்பிரதேச மக்களின் நாளாந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்போம். மக்களின் கோரிக்கைகளுக்கு தீவைப் பெற்றுக்கொள்ள வெகுஜன போராட்டங்களை நடத்தவேண்டிய தேவை ஏற்படும்போது எம்மோடு மக்களும் இணைந்துபோராட முன்வர வேண்டும்.
அந்தவகையில்தான் தேர்தல் காலமில்லாத இன்றைய நிலையில் கிழக்கிலங்கையில் எமது கட்சி மீது அதிகரித்துவரும் அபிமானத்தின் காரணமாகவும் நம்பிக்கை காரணமாகவும் 200 க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர் என தெரிவித்த கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் கிடைக்கவுள்ள சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரித்து எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களை பலப்படுதும்போது அது தமிழ் மக்களுக்கு சமத்துவமான வாழ்வையும் வளமான எதிர்காலத்தையும் ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் அரசியல் செயற்திட்டங்கள், திருமலை மாவட்டத்தில் பணியாற்றும் தோழர்களின் கடுமையான உழைப்பு, அவர்களது முயற்களின் ஊடாக அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பாகவும் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் அவர்களால் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|