ஈ.பி.டி.பியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாக யாழ் மாவட்ட ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் அறிவிப்பு!

Sunday, July 26th, 2020

யாழ் மாவட்ட ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்குவதுடன் அக்கட்சியின் வெற்றிக்காக முழுமையான பங்களிப்பையும் வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு வருகைதந்த குறித்த சங்கத்தின் ஒருதொகுதி பிரதிநிதிகள் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் வி.கே.விக்னேஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

இதன்போது கடந்த நல்லாட்சி காலத்தில் சுகாதார ஊழியர்கள் நியமனம் வழங்குவதாக உத்தரவாதமளிக்கப்பட்ட நிலையில் தமது சேவைகளை முன்னெடுத்தவந்த குறித்த ஊழியர்கள் அந்நியமனத்தில் ஏமாற்றப்பட்டமையால் பொருளாதார இழப்புக்களையும் மனரீதியான பாதிப்புக்களையும் சந்தித்துவருவதாகவும் தமது பிரச்சினைகளுக்கு நியாயம் பெற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேரிக்கை விடுத்தனர்.

குறித்த சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் அவர்களது தொழில் நியமனத்துக்கான உத்தரவாதத்தினை தேர்தலுக்குப் பின்னரான புதிய அரசில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகளவான ஆசனங்களுடன் அந்த அரசாங்கத்தில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் உருவாகுமானால் குறித்த தொழிலாளர்களின் கல்வித் தாராதரத்துக்கு ஏற்றவகையில் அமைச்சு பத்திரம் தாக்கல் செய்து அந்த நியமனங்களை இலகுவாக பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: