ஈ.பி.டி.பியின் வரைபுகள் ரணிலின் விஞ்ஞாபனத்தில் – சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!
Saturday, September 14th, 2024வீழ்சி என்பது நாட்டில் பொருளாதார ரீதியான வீழ்ச்சி மட்டுமல்ல அது அரசியல் ரீதியிலும் இருக்கின்றது என சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் செல்லத்தம்பி சிவச்செல்வம் விந்தன் குறித்த பிரச்சினைகள் நாட்டை முழுமையாக முடக்கி சூனியமாக்கிய போது அதிலிருந்து நாட்டை விடுவிக்க தற்துணிவுடன் முகங்கொடுத்து தனது ஆழுமையால் நாட்டை தூக்கி நிறுத்திய ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் வெற்றியும் அவசியமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
தற்போதுள்ள தென்னிலங்கை அரசியல் தலைவர்களுக்குள் எமது மக்களின் அரசியல், அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கூடிய ஒரே ஒரு தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருந்துவருகின்றனர்
குறிப்பாக ஈ.பி.டி.பி எதை செல்லி வருகின்றதோ அதுவே சாத்தியானது என்றும் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதே நடைமுறைக்க சாத்தியமானதென்றும் ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக நாம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையின் தீரிவின் ஆரம்ப புள்ளியாக 13 ஆவது திருத்தச் சட்டம்தான் சரியானதென கூறிவந்தோம். அதுமட்டுமல்லாது அதை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம் என்றும் கூறியிருக்கின்றோம்
எமது அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பது எமது நிலைப்பாட்டின் வெற்றியாகும்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்குமட்டுமல்லாது அவர்களது அபிலாசைகளுக்காகவும் எதை நாம் கூறிவருகின்றோமோ அதை ஏற்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கறை காட்டுகின்றார்.
அதுமட்டுமல்லாது அதை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தவும் அவர் தயாராக இருப்பதால் தான் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா ரணில் விக்ரமசிங்கவை வெளிப்படையாக ஆதரிக்கின்றார். அதனால்தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவரது எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு உங்களிடம் நாம் கோருகின்றோம்.
இதேவேளை வடக்கில் டக்ளஸ் தேவானந்தா – தெற்கில் ரணில் விக்ரமசிங்க. இதுவே எமது நிலைப்பாடு. அதாவது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இதுவே எமது நோக்கம். இத்தகைய எமது நோக்கம் நிறைவேற வேண்டுமானால் மத்தியி்ல் இந்த நாட்டை ஆழும் அதிகாரத்தில் அமர்வதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு நீங்கள் உங்களின் முழுமையான ஆதரவு பலத்தை வாக்குகளால் வழங்கவேண்டும்.
அதுபோன்று உங்களது அரசியல் உரிமைக் கோரிக்கை உள்ளிட்ட அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கு மாநிலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் பலத்தையும் நீங்கள் வருங்காலத்தில் பலப்படுத்த வேண்டும். இதுவே காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.
இதேவேளை செப்ரொம்பர் 21 நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதி தெரிவுக்கான ஒன்றல்ல. அது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பலத்தை மேலும் உறுதிசெய்வதற்கான ஒரு தேர்தலாகவே இருக்கின்றது.
இதேநேரம் போலியான கருத்துக்கணிப்புகள் சில இயலாதவர்களினால் உலவவிடப்பட்டு வருகின்றது. இது எதுவும் வெற்றிபெறப்போவதில்லை. தபால் மூல வாக்களிப்பில் ரணிலே அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கின்றார். அதனடிப்படையில் அவரே இந்த நாட்டு மக்களின் மனங்களில் சிம்மாசனமிட்டிருக்கின்றார் என்பது புலனாகின்றது
அதனடிப்படையில் தான் நாம் கூறுகின்றோம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ரணிலே தலைமை வகிக்க வேண்டும் என. எனவே அவரது எரிவாயு சிலிண்டர் சின்னமே உங்கள் ஒவ்வொருவரது தெரிவாகவும் இருக்க வேண்டும். அதனூடாக அந்த வெற்றியில் தமிழ் மக்களும் முழுமையான பங்காளிகளாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|