ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவனாதனின் சிறப்புரிமையை அவமதித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Tuesday, September 6th, 2016

கடந்த வாரம் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனை இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவமதித்தமை தொடர்பாக இன்றையதினம் வடக்கு மாகாண சபையில் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாக பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இன்றையதினம் வடக்கு மாகாண சபையின் 61 ஆவது அமர்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனால் கொண்டுவரப்பட்ட சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாக பிரேரணை மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரதும் முழுமையான ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த வாரம் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின்போது தனங்கிளப்பு பகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட  உபகரணங்களை கொண்டு தொழிலிலீடுபடுகின்றனர் என பலமுறை தெரிவித்திருந்த நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட துறைசார் அதிகாரி ஒருவரை மிரட்டியமை  தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் கேட்டதற்கு தகுந்த பதில் வழங்காது  மக்கள் பிரதிநிதிகளையே மிரட்டுமளவுக்கு நடந்துகொண்டதுடன் தனியார் காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் எழுந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்து, பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதிலளிக்க முடியாது திணறிய விஜயகலா தன்னை சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்த முடியாது என்றும்  அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் மிரட்டியதுடன் மக்களால் அதிகளவு வாக்குகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கீழ்த்தரமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தனது செயற்பாடுகளை விமர்சித்தமைக்காக வன்னி மக்களின் பிரதிநிதியான சிறீதரன் M.Pயை குறித்த கூட்டத்தின் கதிரையில் அமர தகுதியில்லாதவர் என கூறியதுடன் ஏனைய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் தரக்குறைவான முறையில் திட்டி தனது இயலாமையையும் செயற்றிறனின்மையையும் வெளிப்படுத்தியதுடன் கூட்டத்திலிருந்து இடைநடுவே வெளியேறியிருந்தார். இதன்போது இராஜாங்க அமைச்சரின் உதவியாளர் ஒருவர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனை தாக்க முற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

northern-provincial-council-600x330

Related posts: