ஈ.பி.டி.பியின் முயற்சியால் திருமலை சின்னத்தோட்ட குடியிருப்பாளர்களுக்கு 2017இல் நிரந்தர வீடுகள்!  

Thursday, September 22nd, 2016

திருகோணமலை கிண்ணியா சின்னத்தோட்டம் பகுதி குடியிருப்பாளர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் 2017ஆம் ஆண்டு  நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்  என கிண்ணியா பிரதேச செயலாளர் உறுதி வழங்கியுள்ளார்.

கிண்ணியா பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராமத்திலிருந்து கடந்தகால அசாதாரண சூழலால் சின்னத்தோட்டம் பகுதியில கடந்த 13 வருடகாலமாக வீடு மலசலகூடவசதியின்றி வாழ்ந்து வரும் மக்கள் அதற்கு தீர்வு கோரி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருமலை மாவட்ட விசேட பிரதிநியான  புஸ்பராசாவிடம்   கோரிக்கை விடுத்தனர்.

மக்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சியின் திருமலை மாவட்ட விசேட பிரதிநிதி புஸ்பராசா கிண்ணியா பிரதேச செயலாளருடன் குறித்த பகுதி மக்களது நிலமைகள் தொடர்பாக 21.09.2016 அன்று சந்திப்பொன்றை மேற்கொண்டு மக்களது நிலைமைகளை எடுத்துக்கூறியிருந்தார். மக்களது நிலைமைகளை கவனத்தி எடுத்த பிரதேச செயலர் எதிர்வரும் 2017இல் சின்னத்தோட்டம் மக்களுக்கான வீட்டுவசதி மற்றும் மலசலகூடவசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படுமென புஸ்பராசாவிடம் உறுதியளித்துள்ளார். இதற்கான விண்ணப்படிவங்களும் அனறையதினம் குறித்த சின்னத்தோட்டம் கிராமசேவையாளரினால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3

Related posts: