ஈ.பி.டி.பியின் முயற்சியால் வேலணை பிரதேசத்தில் வீதி மின்சார விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்!

மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன என வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளருமான கருணாகரகுரு மூர்த்த தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
தற்போது மாரிகாலம் ஆரம்பித்துள்ளமையால் இரவு வேளைகளில் கடும் இருட்டு நிலவுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்களின் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு எமது பிரதேச சபையால் தற்போது வேலணை பிரதேசத்தின் பல பாகங்களிலும் பிரதேச சபை உறுப்பினர்களால் மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
இதனிடையே இன்றையதினம் வேலணை4 ஆம் வட்டாரம் 6 ஆம் வட்டாரம் மற்றும் 8 ஆம் வட்டாரங்களில் தவிசாளர் கருணாகரகுருமூர்தி மற்றும் திருமதி ஜெ.அனுஷியா ஆகியோரது ஒதுக்கீட்டில் முடிப்பிள்ளையார் கோவிலடி மற்றும் புது வீதி, திருவள்ளுவர் வீதி ஆகிய பகுதியில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|